கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவை பேரன்பு என்றும்முள்ளது
1.
ஒருவராய் மாபெரும்,
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்,
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் (2)
2.
பகலை ஆள்வதர்க்கு,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதர்க்கு,
சந்திரனை உருவாக்கினார் – இன்று
3.
செங்கடலை இரண்டாக,
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார் – இன்று
4.
வனாந்திரப் பாதையிலே,
ஜனங்களை நடத்திச் சென்றார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக்கொண்டார் – இன்று
5.
தாழ்மையில் இருந்த,
நன்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகின்றார் – இன்று